BOCS – Cheaters and fraud

சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியதாக ‘கம்ப்யூட்டர் சாப்ட்வேர்’ நிறுவனம் மீது புகார் பட்டதாரி பெண்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு ஈரோடு, டிச.20- சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியதாக ‘கம்ப்யூட்டர் சாப்ட்வேர்’ நிறுவனம் மீது பட்டதாரி பெண்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர். ரூ.30 ஆயிரம் ஈரோடு நாடார் மேட்டில் பயோனிக் அவுட்சோர்சிங் அண்டு கன்சல்டன்ட் சொல்யூசன் (பிஓசிஎஸ்) என்ற தனியார் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தது. அதைப்பார்த்து அந்த நிறுவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றோம். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்.கார்த்திக் என்பவர் நேர்காணல் தேர்வு நடத்தினார். அப்போது வேலையில் சேர முன்வைப்புத்தொகை ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும். அந்த தொகை எங்கள் பெயரில் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு அந்த கணக்கு எண்ணிலேயே செலுத்தப்படும் என்றும், 3 மாத காலம் வேலை தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகையும், பணியில் சேர்ந்ததும் மாதம் ரூ.8 ஆயிரம் வீதம் சம்பளமும் வழங்கப்படும் என்று கூறினார். எங்களது வங்கி கணக்கில் ரூ.30 ஆயிரம் செலுத்தப்படும் என்று கூறியதால், அவர் கூறியதை நம்பி தலா ரூ.30 ஆயிரம் செலுத்தி பணியில் சேர்ந்தோம். துரத்தினர் பின்னர் 3 மாதம் என்பதற்கு பதிலாக சுமார் 1½ மாதங்கள் மட்டும் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் போது உதவித்தொகை எதுவும் வழங்கவில்லை. பின்னர் பணியில் சேர்ந்து சுமார் 5 மாதங்கள் ஆகியும் இதுவரை சம்பளம் எதுவும் வழங்கவில்லை. இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலருக்கு ரூ.1, 000 முன்பணமாக வழங்கப்பட்டது. இந்தநிலையில் நாங்கள் சம்பளம் குறித்தும், ரூ.30 ஆயிரம் பணத்தை இன்னும் எங்கள் பெயரில் வங்கி கணக்கு எண் தொடங்கி செலுத்தாதது குறித்தும் கேட்டோம். ஆனால், சரியான பதில் எதுவும் கூறாமல் நிர்வாக இயக்குனர் கார்த்திக் மழுப்பலாக பதில் கூறி வந்தார். அதைத்தொடர்ந்து எங்கள் பெற்றோருடன் சென்று கேட்டபோது, பணம் தர முடியாது என்றும், உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என்றும் கூறி துரத்தி விட்டனர். இந்த பணிக்காக நாங்கள் செலுத்திய ரூ.30 ஆயிரம், சம்பள நிலுவை ஆகியவற்றுடன் எங்கள் கல்வி சான்றிதழ்களும் நிறுவனத்தில் உள்ளன. அவற்றை பெற்றுத்தரவேண்டும். மேலும் இந்த நிறுவனத்தில் இதுபோல் 60 பேர் உள்ளனர். அவர்களும் சம்பளம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏழை குடும்பங்களை சேர்ந்த அவர்கள் வேறுவழியின்றி வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் உரிய சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 thoughts on “BOCS – Cheaters and fraud”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  1. Without salary cheated ‘ computer software ‘ Report on the company ‘s application for graduate women’s police superintendent Erode , Dec 20 – without salary cheated ‘ computer software ‘ complaint against the company for graduate women gave to the police superintendent . Rs 30 lakh in Erode Nadar Mad Bionic outsourcing and Solution Consultants ( piocies ) need people from the private computer software that was advertised . The company went into finding them for an interview . If the company ‘s managing director . Karthik interview conducted . முன்வைப்புத்தொகை have to pay Rs 30 lakh to join in the work . The amount in a bank account opened in the name of the account that paid ennileye , the 3 -month period of training is on the job . Assistance in training , he joined the Rs 8 lakh per month salary would be paid . Paid Rs 30 lakh in our bank account by saying that , he went on to say he had entrusted the task of paying Rs 30 lakh . Instead of chasing after 3 months only approximately 1 ½ months of training . No allowance has been provided during the training . After about 5 months after the task has not yet provided any salary . Meanwhile, some of the festival of Diwali Rs.1 , 000 was paid in advance . In the meanwhile, we have to pay Rs 30 lakh cash in the bank account number and the name of us have heard of starting payments . However , the correct answer did not say anything in answer to the executive director Karthik continues to be elusive . Then when asked to go with them , that they could not pay , and what you can do with saying that they had been chasing . For this task , we paid Rs 30 lakh , with wage arrears are at our certificates . பெற்றுத்தரவேண்டும் them . In addition, the company has 60 people like this . They are disturbed without pay . They come from poor families have no choice but to work . They are paying the appropriate action to take . Thus , they said . The police are conducting an investigation on the matter .

  2. these all things are said wrong….. i am alive…… come to my office and meet me………….. these message only for ………. ford member who spolied my company name…..